ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் ஸ்ருதி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, அரக்கோணம் வேடல் காந்திநகரை சேர்ந்த கருணாகரன், அரக்கோணம் சோளிங்கர் ரோடு சசிகுமார், அசோக் நகர் லோகேஷ் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா விற்றதாக அரக்கோணம் டவுன் மற்றும் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் ஸ்ருதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். ஸ்ரீ. கலெக்டர் வளர்மதி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் குற்றச் செயல்கள் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.