ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு காலனி பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் ரஜினி (28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சரளா (22) என்கிற மனைவியும், மூன்று மாதமே ஆன குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரளா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். குழந்தையின் தொடர் அழகை சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் மயங்கிய நிலையில் இருந்த சரளாவை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா இறந்தார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரளா தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.