ராணிப்பேட்டை நகராட்சி வார சந்தையில் அமைக்கப்படவுள்ள தமிழறிஞர் மு. வரதாசனார் திருவுருவ சிலையுடன் கூடிய குவிமாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா. செல்வராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி இ. ஆ. ப உடன் இருந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குநர் ப. கண்ணன், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் எம். சண்முகம், தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர் மு. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, குவிமாடம் அமைக்கும் பணிகள் குறித்து அரசு செயலாளர் இரா. செல்வராஜ் ஆலோசனைகள் வழங்கினார். மேலும், குவிமாடம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த குவிமாடம் அமைக்கும் பணிகள் 2024 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது.