தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு வெடிப்புகள் அதிகரித்தன. இதில், 5 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

அதன்படி, அரக்கோணம் பகுதியில் 2 வீடுகள், கலவையில் ஒரு வீடு, 1 வைக்கோல் போர், சோளிங்கரில் கரும்பு தோட்டம் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்துகளில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்துகளுக்கு பட்டாசு வெடித்தது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று காவல்துறை, தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை தொடர்ந்து இன்னும் நாளையும் பல இடங்களில் பட்டாசு வெடிப்பார்கள் என்பதால், விபத்துகள் நடக்காமல் தவிர்க்க தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.