அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (9ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, பள்ளூர், கம்மவார்பாளையம், கோவிந்த வாடி அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம், சிஐஎஸ்எப், அரிகல பாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்துார், எலத் தூர், கீழ்வெங்கடாபுரம், வேட்டங்குளம், மேலேரி, சிறுண மல்லி, சம்பத்ராயன்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணிகள் முடிந்த பின் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் முன்னதாகவே நிறுத்திவிட்டு, மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.