அரக்கோணம் அடுத்த முள்வாய் ஆனைப்பாளையம் கிராமத்தில் உள்ள மணல் குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் வருவாய் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மணல் குவாரியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை சிறைபிடித்தனர். மேலும், மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் லாரிகளை விடுவித்தனர். மேலும், மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.