ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 33 உதவியாளர், எழுத்தர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நவம்பர் 10-ந் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?

இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://drbrpt.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதியன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் தகுதிகள்

  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்

இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24-ந் தேதியன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும்.

மேலும் விவரங்கள்

மேலும் இது தொடர்பான விரிவான விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (https://drbrpt.in) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கவனித்து, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.