ராணிப்பேட்டை அடுத்த கீழ் விஷாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.