திருவலம் சுகர் சுகர்மில் அருகில் வசித்து வருபவர் வீராசாமி. இவரின் 2 வயது பெண் குழந்தை ரேச்சல். நேற்று மாலை குழந்தையின் பாட்டி துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது, பக்கெட்டில் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ரேச்சல் எதிர்பாராதவிதமாக பக்கெட்டுக்குள் விழுந்துள்ளது.

இதில் மூச்சு திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குழந்தை ரேச்சல் தனது பாட்டியின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பக்கெட்டில் விழுந்துவிட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.