ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். அதே ஊரைச் சேர்ந்த சிலர் ஏரி மண் எடுத்தது குறித்து லட்சுமணன் விஏஓவிடம் புகார் செய்தார். 

இதனால் ஆத்திரமடைந்த சிலர் லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கொலை மிரட்டல் சம்பந்தமான ஆடியோ பதிவுடன் 'லட்சுமணன் ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிப்காட் போலீசார் லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நரசிங்கபுரத்தைச் சேர்ந்த அசோக் (44), வெங்கடேசன் (35) ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.