ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த விளாப்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் அருண் (வயது 18) மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி மோதி அவருக்கு காயம் ஏற்பட்டது.

லாரியில் இருந்த கிரானைட் கற்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலையில் விழுந்த கற்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

அருண் திமிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.