பெங்களூர்-சென்னை ரயில் திருட்டில் கொள்ளையன் கைது - ரூ. 12 லட்சம் பணம், வெள்ளி பறிமுதல்
பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் கடந்த 30ம் தேதி சென்னை புரசைவாக்கம் சதீஷ்குமார் s3 கோச்சில் பயணம் செய்தார். அவரது பெட்டியில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 12 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் வெள்ளி திருடு போனது.
இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் தனிப்படை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அரக்கோணம் ஏபி எம் சர்ச் பகுதியை சேர்ந்த ஜெகன் குமார் என்பவர் சதீஷ்குமார் பயணம் செய்த ரயிலில் ஏறி, அவரது பெட்டியில் இருந்த பணம் மற்றும் வெள்ளியை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஜெகன் குமாரை கைது செய்து, திருடு போன அனைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஜெகன் குமார் மீது ரயில்வே தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.