ராணிப்பேட்டை: 6 பேர் கொண்ட கும்பல் மது குடித்துக் கொண்டிருந்த இருவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் சிலோன் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரவிகுமார்(42), மணிகண்டன்(40). இவர்கள் இருவரும் நேற்று இரவு பள்ளேரி-வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ரவிகுமார் மற்றும் மணிகண்டனை தாக்கி, ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு பேரின் செல்போன்களை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரவிகுமார் மற்றும் மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.