ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பண்டிகை நாட்களை முன்னிட்டு பிரபல கடைகள் மற்றும் உணவகங்கள் பெயரில் பரிசு கூப்பன் அளிப்பதாக கூறி வாட்ஸ்அப் லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறையின் அறிவுறுத்தல்கள்:
- பிரபல கடைகள் மற்றும் உணவகங்கள் பெயரில் பரிசு கூப்பன் அளிப்பதாக கூறி வரும் வாட்ஸ்அப் லிங்குகளை தயவுசெய்து கிளிக் செய்யாதீர்கள்.
- அந்த லிங்குகளை கிளிக் செய்து பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை எந்தவொரு தளத்திலும் பகிராதீர்கள்.
- பண்டிகை காலங்களில் பரிசு கூப்பன்களை வாங்கும் போது, அந்த கடை அல்லது உணவகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து மட்டுமே வாங்கவும்.
மேலும், இந்த மோசடி குறித்து எந்தவொரு தகவல்களும் கிடைத்தால், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும்.
இந்த எச்சரிக்கையை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு, மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.