ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே வாழைப்பந்தல் சாலை பகுதியை சேர்ந்த நந்தினி (13) 9-ம் வகுப்பு படித்து வந்தார். கலவை புத்தூர் குட்டை அருகே மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டின் கயிறை எடுத்து வருவதற்காக நந்தினி சென்றபோது எதிர்பாராத விதமாக கால் தவறி குட்டையில் விழுந்ததாக தெரிகிறது.

இதில் மாணவி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.