ராணிப்பேட்டையில் ஓட்டல் ஊழியர் மர்மமான மரணம்

ராணிப்பேட்டை முத்துக்கடையில் பஸ் நிலையம் அருகில் நேற்று அதிகாலை ஒரு ஓட்டல் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அந்த ஊழியர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்தி (45) என்பதும், முத்துக்கடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று அதிகாலை, அருகில் உள்ள டீக்கடைக்கு வந்தவர்கள், பஸ் நிலையம் அருகில் ஒருவர் பிணமாக கிடப்பதைப் பார்த்ததாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில், கார்த்தி மது போதையில் இறந்ததாக தெரிந்தது. ஆனால், அவர் மது போதையில் இங்கு வந்து படுத்து தூங்கிய போது இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.