ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 35). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் பனப்பாக்கம் சென்றார்.

ஓச்சேரி-அரக்கோணம் ரோடு நங்கமங்கலம் கிராம அருகே வரும்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக பரத்குமாரின் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.