ராணிப்பேட்டை நகராட்சி, இராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் தேவி மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் ஆர் காந்தி கர்ப்பிணி தாய்மார்களுடன் அமர்ந்து மதிய உணவினை சாப்பிட்டார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் ஆர் காந்தி, கர்ப்பிணி தாய்மார்களுடன் அமர்ந்து அவர்களின் குடும்பம் மற்றும் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ. எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை. முஹமது ஹமீன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் சே. வெங்கட்ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், நகரமன்றத் துணைத் தலைவர்ரமேஷ் கர்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Minister R Gandhi attended the community baby shower event organized by the Integrated Child Development Services Scheme at Devi Mahal, near Rajeshwari Theatre in Ranipet Municipality.