ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா வேப்பேரி ஊராட்சி கொந்தங்கரை கிராமத்தில் இன்று மதியம் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, அங்குள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மணி என்பவருக்கு சொந்தமான பசுமாடு திடீரென இடி மின்னலால் தாக்கப்பட்டது.
இதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.