ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 32 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 75%-99% வரை 3 ஏரிகளும், 51%-75% வரை 15 ஏரிகளும், 25%-51% வரை 124 ஏரிகளும் நிரம்பி உள்ளன.

இந்த ஏரிகள் நிரம்பியதால், விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.