ஓச்சேரி அருகே உள்ள கரிவேடு கிராமத்தை சேர்ந்த தாஸ், சங்கீதா தம்பதிகளின் மகள் பூஜா (18). இவர் அரக்கோணம் அருகே உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கல்லூரி சென்ற பூஜர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பூஜா குறித்து எந்த வித தகவலும் தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜாவின் தாய் சங்கீதா இதுகுறித்து அவளூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.