ராணிப்பேட்டை நெமிலி தாலுகா நாகவேடு கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி, மகள் ஆகிய மூன்று பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் (50). இவரது மனைவி மலர்க்கொடி, மகள் புவனேஸ்வரி (23). இன்று காலை குடும்பத் தகராறு ஏற்பட்டதையடுத்து, மூன்று பேரும் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்தபோது, தேவன் கிணற்றில் மூழ்கி இறந்துவிட்டார். மலர்க்கொடி, புவனேஸ்வரியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.