காட்பாடி அடுத்த அக்கிரெட்டி புதுாரைச் சேர்ந் தவர்கன்னியப்பன். இவரது மூத்த மகன் அசோக் குமார் (40), மேஸ்திரி வேலை செய்கிறார். இவர் தம்பி சந்திரசேகர் (35) ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இந்நிலையில், சந்திரசேகர் அடிக்கடி மது குடித்துவிட்டு, அண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 6ம் தேதி வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர், அண்ணனிடம் தகராறில் ஈடுபட்டதில் கை கலப்பாக மாறியது.
இதில் சந்திரசேகர் ஆவேசமடைந்து அசோக்குமார் வலது கையின் மோதிர விரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். தொடர்ந்து, ரத்தம் சொட்ட சொட்டதுடிதுடித்த அசோக்குமாரை மீட்டு ‘108' ஆம் புலன்ஸில் ஏற்றி, அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், காட்பாடி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரித்து, வருகின்றனர்.