ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகைகள் போன்ற வீட்டு உப யோக பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன் பாட்டு பொருட்களை கல்லூரிகளில் காட்சிப் படுத்தி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்ககளுக்கு சரியான விலையில் விற்பனை செய்ய கல்லூரி சந்தைகள் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 11ம்தேதி முதல் 13ம் தேதி வரையிலும், ஆற்காடு விளாப்பாக்கம் மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் வரும் 14ம்தேதி முதல் 16ம் தேதி வரையிலும் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் கல்லூரி சந்தைகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
இதில் பயன்பெறவிரும்பும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்களை மகளிர் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும், பொது மக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பெற்று பயன்பெறுமாறும் ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார்.