வேலூரில் மூன்று கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்
வேலூர்: பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நேற்று காலை 8:30 மணி அளவில் வேலூரில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் இருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் முன்னாள் இருந்த கார் தடுச்சுவரில் மோதி அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வேலூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற காரை ஓட்டிக் கொண்டிருந்தவர் திடீரென பிரேக் அடித்தார். இதனால் பின்னால் வந்த கார் ஓட்டுநர் நிலையை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற கார் மீது மோதினார். இதில் முன்னால் சென்ற கார் தடுச்சுவரில் மோதி அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார்களில் இருந்த 5 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமற்றது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.