ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ். அவரது மகன் யுவராஜ் (வயது 20). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தார்.

புலித்தாங்கல் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.