அரக்கோணம் கிருபில்ஸ் பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை, விண்டர் பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்.ஆர். கேட் பகுதியில் புதர் மறைவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில் அரக்கோணம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பார்தீபன் (வயது 27) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கூறுகையில், "கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.