ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கீதா, 51; இவரின் மகன் ராம்கி. சென்னையில் வழக்கறிஞராக உள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன் மகன் வீட்டுக்கு சென்ற கீதா, நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்தவர் பீரோவை பார்த்தபோது, 10 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

அவர் புகாரின்படி பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.