அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றியுள்ள எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை ஏற்படும்.இதனை செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த மக்கள் தங்கள் தேவைக்கேற்ப முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.