ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி 11-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் புதியதாக சமூக கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.24லட்சத்து 96ஆயிரம் ஆகும்.

இந்த சமூக கழிப்பறை கட்டிடங்கள் குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் விநாயகம், பொறியாளர் பரமுராசு, நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா உள்பட நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சமூக கழிப்பறை கட்டிடங்கள் திறப்பால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரமான வசதிகளைப் பெறுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.