மிலாடி நபி, காந்தி ஜெயந்தி அன்று மதுபான விற்பனை தடை
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வரும் 2023-09-28 (வியாழன்) மிலாடி நபி மற்றும் 2023-10-02 (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

இந்த நாள்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், மதுக்கூடத்தின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். மேலும், மதுக்கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அறிவிப்பை அனைவரும் கடைப்பிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்.