வியாழக்கிழமை மாலையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால் குபேரரின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து செல்வ செழிப்பில் மேலோங்கி திகழ்வோம்.

If we light this lamp and worship it on Thursday we can get the grace of Lord Kubera and get wealth and prosperity.


குபேர பகவானின் அருள் கிடைக்க விரும்புபவர்கள் வியாழக்கிழமை மாலை வேளையில் குபேர தீபத்தை ஏற்றி வைத்து வழிபடலாம். குபேர பகவானுக்கு உகந்த நேரமாக மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கருதப்படுகிறது.

குபேர தீபத்தை ஏற்றும் முன், குபேர விளக்கின் அடியில் 5 ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். குபேர பகவானுக்கு 5 என்ற எண்ணுக்கு ஆதிக்கம் உண்டு என்பதால், 5 ரூபாய் நாணயத்தை வைத்து குபேர விளக்கை ஏற்றுவது சிறப்பு.

குபேர தீபத்தை ஏற்றிய பிறகு, பச்சை நிற திரியை பயன்படுத்தி நல்லெண்ணெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். பின்னர், 108 ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து வைத்துக் கொண்டு குபேரரின் மூல மந்திரத்தையோ அல்லது லட்சுமி குபேரரின் மூல மந்திரத்தையோ கூறி அர்ச்சனை செய்யலாம்.

இவ்வாறு நாம் வாராவாரம் வியாழக்கிழமை மாலை வேளையில் குபேர விளக்கை ஏற்றி வைத்து குபேரரை மனதார வணங்கி வழிபடுவதன் மூலம் அவர் நமக்கு அனைத்து செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

குபேர பூஜை செய்யும் பொழுது தாமரையும், சங்கையும் உபயோகிப்பது சிறந்தது. குபேர பகவானுக்கு நெல்லிக்கனி என்பது உகந்த கனி ஆகும். எனவே, குபேர பூஜையில் நெல்லிக்கனியையும் வைத்து வழிபடலாம்.

குபேர பூஜை செய்வதால், குபேரரின் அருளால் நமக்கு செல்வ செழிப்பும், நல்வாழ்வும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.