ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ் துறை இணைந்து மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்துப் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் இரா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
அந்த வகையில், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை மாணவி மோ.ஜெயஸ்ரீ முதல் பரிசாக ரூ.7,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார்.
அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, தமிழ்த்துறை மாணவி இரா.இனித்தா இரண்டாம் பரிசாக ரூ.5,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார். சோளிங்கார் அரசுக் கலைக் கல்லூரி மாணவி கு.தமிழ்ச்செல்வி மூன்றாம் பரிசாக ரூ.3,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
முதல் இடம் பெற்ற மாணவி மோ.ஜெயஸ்ரீக்கு வாழ்த்துகள்!