ஆற்காடு அடுத்த தாஜ்புரா அருகே சாலையோரம் பிச்சை எடுத்து வசித்து வந்த 60 வயது முதியவர் இறந்து விட்டார். அவரது உடல் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. 15 நாட்கள் ஆகியும் உறவினர்கள் யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.ஆர்.பி.பி.தாருகேஷன் முன்வந்தார். அவர் தனது தந்தையான சமூக சேவகர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியனின் உதவியுடன் முதியவரின் உடலை அடக்கம் செய்தார்.
அனாதை பிணத்தை அடக்கம் செய்த பள்ளி மாணவனை சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் மாணவனின் இந்த செயலை பாராட்டினர்.