• 4 பைக்குகள் எரிந்து நாசம்
  • உயிர் சேதம் ஏதும் இல்லை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி யுவராஜ் தனது வீட்டின் முன் 4 பைக்குகளை நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்ததால் அவர் எழுந்து சமையல் அறைக்கு சென்று பார்த்தார். வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து புகை வருவதை கண்டுபிடித்த அவர் வெளியே சென்று பார்த்தார்.

வீட்டின் முன்பகுதி வழியாக செல்லும் மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 பைக்குகளும் தீப்பற்றி எரிந்தது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் 4 பைக்குகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.

இச்சம்பவம் குறித்து அவளூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.