🏁 விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான துவாரகா பிரசாத் மிஸ்ரா 1901ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பண்டரி கிராமத்தில் பிறந்தார்.

🎻 வயலின் இசைக்கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தார்.

👉 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஹோண்டா நிறுவனர் சொயிச்சீரோ ஹோண்டா மறைந்தார்.

👪 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.

🚀 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மரைனர் 7, செவ்வாய் கோளிற்கு மிக அருகில் சென்றது.

🗽 1884ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.


நினைவு நாள் :-


மர்லின் மன்றோ


👉 அமரநட்சத்திரம், ஹாலிவுட்டின் ராணி மர்லின் மன்றோ 1926ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன்.

👉 இவருக்கு 1950-ல் வெளிவந்த தி அஸ்பால்ட் ஜங்கிள்(The Asphalt Jungle), டு நாட் பாதர் டு நாக் படங்கள்(Do not Bother to Knock) புகழை தேடித் தந்தன. இவர் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

👉 ஒரு நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 36வது வயதில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

நீல் ஆம்ஸ்ட்ராங்


🌔 நிலாவில் முதன் முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார்.

🌔 இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டது. தனது 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார்.

🌔 1962-ல் நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், கமாண்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

🌔 1969-ல் மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.

🌔 உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம், பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது போன்ற பல பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார்.

🌔 இவரது வாழ்க்கை வரலாற்று நூலான 'ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்' 2005ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது 82-வது வயதில் (2012) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


25 – சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார்.

135 – உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது.

910 – தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது.

1100 – இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார்.

1305 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டார்.

1583 – சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜான்சு, நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1600 – இசுக்காட்லாந்து மன்னர் ஆறாம் யேமசு மீதான கோரி கோமகன் ஜான் ரத்வென்னின் கொலை முயற்சி இடம்பெற்றது.

1689 – 1,500 இரக்கேசு இனத்தவர்கள் புதிய பிரான்சின் (இன்றைய கியூபெக்) லாச்சின் நகரைத் தாக்கினர். 250 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1716 – ஆசுத்திரிய-துருப்பிப் போர்: பெத்ரோவராதின் சமரில் துருக்கியின் ஐந்தில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1806 – பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[1]

1816 – பிரான்சிசு ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

1824 – சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860 – சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.

1861 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874 – சப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.

1884 – விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1906 – ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1914 – முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சூயசு கால்வாயைத் தம் வசப்படுத்தினர்.

1926 – அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.

1949 – எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.

1958 – தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.[2]

1960 – புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963 – பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1965 – பாக்கித்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய-பாக்கித்தான் போர் ஆரம்பமானது.

1971 – முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.

1979 – ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

1981 – வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984 – வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.[3]

1989 – நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்றது.

1995 – யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

2010 – ஆப்கானித்தான், படாக்சான் மாகானத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012 – அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.

இன்றைய பிறப்புகள்


1681 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு நாடுகாண் பயணி (இ. 1741)

1802 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (இ. 1829)

1850 – மாப்பசான், பிரான்சியக் கவிஞர் (இ. 1893)

1898 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)

1905 – மு. அ. முத்தையா செட்டியார், தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் (இ. 1984)

1908 – ஹரல்ட் ஹோல்ட், ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)

1915 – ஹரி கிருஷ்ண கோனார், மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1974)

1923 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 2005)

1926 – சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2009)

1927 – ஜே. பி. சந்திரபாபு, தமிழக நகைச்சுவை நடிகர், பாடகர் (இ. 1974)

1930 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2012)

1931 – பாப்பா உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2010)

1934 – கே. பாலாஜி, திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (இ. 2009)

1947 – பிரான்சு ஆன்னி கோர்தவா, அமெரிக்க வானியற்பியலாளர்

1961 – அதுல சமரசேகர, இலங்கைத் துடுப்பாளர், பயிற்சியாளர்

1968 – நளாயினி தாமரைச்செல்வன், ஈழத்து எழுத்தாளர்

1968 – மரீன் லெ பென், பிரான்சிய அரசியல்வாதி

1970 – ஜேம்ஸ் கன், அமெரிக்க இயக்குநர், நடிகர்

1974 – கஜோல், இந்திய நடிகை

1987 – ஜெனிலியா, இந்திய நடிகை

இன்றைய இறப்புகள்


1895 – பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய மெய்யியலாளர், மார்க்சியவாதி (பி. 1820)

1957 – எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு, செருமானிய வேதியியலாளர் (பி. 1877)

1962 – மர்லின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)

1971 – கே. ஆர். ராமசாமி, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர்

1983 – பார்ட் போக், டச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1906)

1983 – ஜோன் இராபின்சன், ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1903)

1991 – சோய்செரோ ஹோண்டா, சப்பானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1906)

2000 – அலெக் கின்னஸ், ஆங்கிலேய நடிகர் (பி. 1914)

2000 – லாலா அமர்நாத், இந்தியத் துடுப்பாளர் (பி. 1911)

2001 – அரசு மணிமேகலை, தமிழக எழுத்தாளர் (பி. 1945)

2019 – சாலிந்த திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1958)

2019 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1931)

இன்றைய சிறப்பு நாள்


வெற்றி நாள் (குரோவாசியா)

விடுதலை நாள் (புர்க்கினா பாசோ)