அகில இந்திய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கோரக்பூரில் (உத்திர பிரதேசம்) வரும் செப்டம்பர் 01-ஆம் தேதி முதல் செப்டம்பர் 06, 2023 வரை நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆண்கள் அணிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான தமிழக அணியில் பல மாவட்டங்களை சார்ந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணியில் முந்தைய செயல்திறன் மற்றும் மாவட்டத்தில் சிறந்த வீரர்களின் அடிப்படையில் கீழே உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சீனியர் வீரர்கள்
1.கார்த்திக்
2.விமல்ராஜ்
3.பிரசாந்த்
4.சதீஷ்
5.மணிகண்டன்
6.வசந்த் குமார்
7.அபினாஷ்
8.ஸ்ரீவர்ஷன்
9. மெய்யப்பன்
10.விஜய குமார்
11.மோகன்
12.மொஹமது ஹர்ஷத்
13.பிரகாஷ்
14.ஷரத்
இவர்களை தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் P.ஞானவேல், டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் (ம) தமிழக அணியின் தலைமை பயிற்சியாளர் R.முனிரத்தினம், ஆகியோர் பாராட்டி வெற்றி பெற வாழ்த்தினர்.
இவ்வீரர்கள் 30.08.2023 அன்று எம்.ஜி.இராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோரக்பூர் ரப்திசாகர் அதிவிரைவு வண்டியில் புறப்படுகின்றனர்.