சிப்காட், நவல்பூர், வாலாஜா பகுதிகளில் 5-ந் தேதி மின்நிறுத்தம்
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம், சிப்காட், வாலாஜா, ஒழுகூர், முசிறி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பர நல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரிநகர், அவரக்கரை, சிப்காட், யார் சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி, செட்டித்தாங்கல், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி. மோட்டூர், வன்னிவேடு அம்மணந்தாங்கல், பெல்லியப்பாநகர், டிகே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளும்பாக்கம். அனந்தலை, ஒழுகூர், வாங்கூர்.கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, கன்னிகாபுரம், எடையங்குப்பம், படியம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.