ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவி மாலதி (43) தற்கொலை செய்து கொண்டார்.
மாலதி - முருகவேல் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாலதி, அப்பகுதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாலதியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெமிலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலதியின் மரணம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.