ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் உக்கம்சந்த். ஆற்காடு அடுத்த காவனூரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பியூஸ் (வயது 22). இவர் தனது தந்தைக்கு துணையாக கடையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பியூஸ் காவனூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

ஆற்காடு அண்ணா சாலையில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பியூஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழேவிழுந்த அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பியூஸ் மரணம் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.