சோளிங்கர் லிங்கா ரெட்டி சாலையில் கரும்பு ஏற்றி வந்த லாரி மின்கம்பம் மீது மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
விபத்து குறித்து மின்சாரத்துறை மற்றும் காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெறிவித்தனர். விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மின் கம்பம் அகற்றப்பட்டது.

இந்த சம்பவத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்கு வரத்தை சீர் செய்தனர். 

இந்த சாலையின் இருபுறமும் உள்ள ஆக்ரமிப்பை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.