குறள் : 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
மு.வ உரை :
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்
கலைஞர் உரை :
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.
சாலமன் பாப்பையா உரை :
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.
Kural 1211
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu
Explanation :
Where with shall I feast the dream which has brought me my dear ones messenger ?
Horoscope Today: Astrological prediction for August 23, 2023
இன்றைய ராசிப்பலன் - 23.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
23-08-2023, ஆவணி 06, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 03.31 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் காலை 08.08 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் பிற்பகல் 3.19 மணி முதல் 3.55 மணி வரை.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன்- 23.08.2023 | Today rasi palan - 23.08.2023
மேஷம்
இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொது காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வரவை காட்டிலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் நிதானமின்றி செயல்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகப் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். செலவுகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.