குறள் : 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
மு.வ உரை :
திங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
கலைஞர் உரை :
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.
சாலமன் பாப்பையா உரை :
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
Kural 1210
Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Pataaadhi Vaazhi Madhi
Explanation :
May you live O Moon! Do not set that I mine see him who has departed without quitting my soul.
Horoscope Today: Astrological prediction for August 22, 2023
இன்றைய ராசிப்பலன் - 22.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
22-08-2023, ஆவணி 05, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 03.06 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் காலை 06.31 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 22.08.2023 | Today rasi palan - 22.08.2023
மேஷம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு நற்பலனை தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிம்மதி ஏற்படும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
தனுசு
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.