குறள் : 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
மு.வ உரை :
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்ளூ காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
கலைஞர் உரை :
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?.
சாலமன் பாப்பையா உரை :
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!.
Kural 1208
Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu
Explanation :
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?
Horoscope Today: Astrological prediction for August 20, 2023
இன்றைய ராசிப்பலன் - 20.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
20-08-2023, ஆவணி 03, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 12.22 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 04.21 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். மாத சதுர்த்தி-நாக சதுர்த்தி விரதம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 20.08.2023 | Today rasi palan - 20.08.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன் தடையின்றி வசூலாகும்.
ரிஷபம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.
கடகம்
இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
சிம்மம்
இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
தனுசு
இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது, வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.
மீனம்
இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.