குறள் : 1205

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.


மு.வ உரை :

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர் எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

கலைஞர் உரை :

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

சாலமன் பாப்பையா உரை :

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?.


Kural 1205

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol

Emnenjaththu Ovaa Varal

Explanation :

He who has imprisoned me in his soul is he ashamed to enter incessantly into mine.


Horoscope Today: Astrological prediction for August 17, 2023


இன்றைய ராசிப்பலன் - 17.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

17-08-2023, ஆடி 32, வியாழக்கிழமை, பிரதமை திதி மாலை 05.36 வரை பின்பு வளர்பிறை துதியை. மகம் நட்சத்திரம் இரவு 07.58 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 07.58 வரை பின்பு சித்தயோகம். சந்திர தரிசனம். (திருக்கணிதம்) 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 17.08.2023 | Today rasi palan - 17.08.2023

மேஷம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பதால் லாபம் அடைவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய வாய்ப்புகளால் வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபம் அடையலாம்.

மகரம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் பெருகும்.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026