குறள் : 1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.


மு.வ உரை :

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?


கலைஞர் உரை :

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?


சாலமன் பாப்பையா உரை :

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?


Kural 1195

Naamkaadhal Kontaar Namakkevan Seypavo

Thaamkaadhal Kollaak Katai


Explanation :

He who is beloved by me what will he do to me if I am not beloved by him ?


Horoscope Today: Astrological prediction for August 07, 2023


இன்றைய ராசிப்பலன் - 07.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

07-08-2023, ஆடி 22, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.15 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 01.16 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. 

இன்றைய ராசிப்பலன் - 07.08.2023 | Today rasi palan - 07.08.2023

மேஷம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட்கள் சேரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி ஏற்படும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் சற்று ஏமாற்றத்தை அளிக்கும். எடுத்த காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவருடைய நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு தேடி வரும்.

கடகம்

இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இந்த நாள் இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிட்டும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.

தனுசு

இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்ய வேண்டி வரும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் நட்புடன் செயல்படுவார்கள். சேமிப்பு பெருகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் தலையீட்டால் திருமண முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.




கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026