குறள் : 1191

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.


மு.வ உரை :

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர் காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.


கலைஞர் உரை :

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்


சாலமன் பாப்பையா உரை :

தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.


Kural 1191

Thaamveezhvaar Thamveezhap Petravar Petraare

Kaamaththuk Kaazhil Kani

Explanation :

The women who are beloved by those whom they love have they have not got the stone-less fruit of sexual delight ?

Horoscope Today: Astrological prediction for August 03, 2023


இன்றைய ராசிப்பலன் - 03.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

03-08-2023, ஆடி 18, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 04.17 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.56 வரை பின்பு சதயம். சித்தயோகம் காலை 09.56 வரை பின்பு மரணயோகம். ஆடி பதினெட்டாம் பெருக்கு. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 03.08.2023 | Today rasi palan – 03.08.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்திற்காக சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. 

கடகம்

இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

சிம்மம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் வெளிநாடு மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சிறு இடையூறுக்குப் பின் சாதகமான பலன்கள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற் படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026