கலவை வட்டம், வேம்பி கிராமத்தை சோ்ந்த ரஞ்சித் மகன் விஜயகாந்த் (13 ). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ஞானமணி இவரது மகன் ரவிந்திரன் (17) திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இருவரும் பைக்கில் வேம்பியில் இருந்து கலவைக்கு வந்தனா். அப்போது கலவை திமிரி சாலை வளைவில் பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரு மாணவா்களும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை மீட்டு அக்கப்பக்கத்தினா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.