நிகழ்வுகள் :-


👉 1920ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி மரபணுவின் சரியான வடிவத்தை கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் லண்டனில் பிறந்தார்.

👉 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிரதிபா பாட்டீல், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆனார்.


முக்கிய தினம் :-


உலக கருவியல் தினம்


👉 உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன்பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப்பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.

👉 முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.



பிறந்த நாள் :-


செம்மங்குடி சீனிவாச ஐயர்


👉 மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.

👉 இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார். 

மேலும், 1927-ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர்.

👉 இவர் சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

👉 அதிக மேடைகளில் பாடி சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 95வது வயதில் (2003) மறைந்தார். 



இன்றைய நிகழ்வுகள்


306 – முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார்.

1261 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.

1467 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

1547 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1554 – முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார்.

1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர்.

1593 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் புரட்டத்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினார்.

1603 – இசுக்கொட்லாந்தின் ஆறாம் யேம்சு இங்கிலாந்தின் மன்னராக (முதலாம் யேம்சு) முடிசூடினார். இதன் மூலம் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றிணைந்தன. அரசியல் ரீதியான இணைப்பு 1707 இல் நிகழ்ந்தது.

1609 – ஆங்கிலேயக் கப்பல் சீ வென்ச்சர் வர்ஜீனியா செல்லும் வழியில் புயலில் சிக்கி பெர்முடாவில் தரை தட்டியது. உயிர்தப்பியவர்கள் அங்கு புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.

1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: போரின் கடிசைச் சமர் கடலூர் முற்றுகை அமைதி உடன்பாட்டுடன் முடிவடைந்தது.

1797 – எசுப்பானியாவின் ரெனெரைஃப் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஒராசியோ நெல்சன் தனது 300 படையினரையும், தனது ஒரு கையையும் இழந்தார்.

1799 – எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான்.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கனடா மீதான அமெரிக்காவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1837 – மின்சாரத் தந்தியின் முதலாவது வணிகரீதியான பயன்பாடு இலண்டனில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியத்தைக் கட்டிக்காக்கவே போரிடுவதாகவும், அடிமைமுறையை ஒழிக்கவல்ல என ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

1869 – யப்பானில் மெய்சி மீள்விப்பு சீரமைப்பின் ஒரு பகுதியாக யப்பானிய நிலக்கிழார்கள் தமது நிலங்களை பேரரசருக்குக் கொடுத்தனர்.

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895) ஆரம்பமானது.

1898 – புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

1908 – அஜினோமோத்தோ டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1917 – கனடாவில் முதல் தடவையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1925 – சோவியத் செய்தி நிறுவனம் "டாஸ்" நிறுவப்பட்டது.

1939 – இலங்கையில் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி அமைக்கப்பட்டது.

1934 – ஆத்திரியாவின் அரசுத்தலைவர் எங்கல்பேர்ட் டோல்ஃபுசு நாட்சிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் கனடிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுபிரிங் நடவடிக்கை பெரும் இழப்புகளைச் சந்தித்தது.

1946 – அணுகுண்டு சோதனை: மார்சல் தீவுகளில் பிக்கினி திட்டில் அணுவாயுதங்கள் நீருக்கடியில் வெடிக்கவைக்கப்பட்டன.

1956 – அமெரிக்காவில் நான்டக்கெட் தீவுக்கருகில் இத்தாலியப் பயணிகள் கப்பல் அண்ட்றியா டோரியா ஸ்டாக்கோம் கப்பலுடன் மோதி அடுத்தநாள் மூழ்கியது. 51 பேர் உயிரிழந்தனர்.

1957 – தூனிசியா குடியரசு நிறுவப்பட்டது.

1961 – பனிப்போர்: பெர்லின் மீதான எந்தவிதமான தாக்குதலும் நேட்டோ மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.

1973 – சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

1976 – வைக்கிங் திட்டம்: வைக்கிங் 1 செவ்வாய்க் கோளின் சைடோனியா என்ற பகுதியைப் படம் பிடித்தது.

1978 – வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் முதலாவது மாந்தர் (லூயிசு பிரவுன்) இங்கிலாந்தில் பிறந்தார்.

1979 – சினாய் தீபகற்பத்தின் இன்னும் ஒரு பகுதியை இசுரேல் எகிப்திடம் திருப்பிக் கொடுத்தது.

1983 – கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 – சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற உருசியாவின் சிவெத்லானா சவீத்சுக்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1993 – தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் புனித யேம்சு தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 11 மதகுருக்கள் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர்.

1993 – இசுரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது. ஏழு நாட்கள் இப்போர் நீடித்தது.

1993 – மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.

1994 – இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையில் வாசிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948 முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.

1995 – பாரிசு நகரில் தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

1996 – புருண்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் சில்வெசுட்டர் இந்திபந்துங்கான்யா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1998 – யாழ்ப்பாணத்தில் இருந்து 52 தமிழ் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தனுஷ்கோடி அருகே கவிழ்ந்ததில் 15 பெண்கள், 5 சிறுவர்கள் உட்பட 45 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.[1]

2000 – கான்கோர்டு ஏர் பிரான்சு வானூர்தி 4590 பாரிசு பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் உயிரிழந்தனர்.

2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

2010 – ஆப்கானித்தான் போர் தொடர்பான முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

இன்றைய பிறப்புகள்



1165 – இப்னு அரபி, சூபி அறிஞர் (இ. 1240)

1854 – ஆல்பிரட் பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (இ. 1930)

1875 – ஜிம் கார்பெட், இந்திய சூழலியலாளர், எழுத்தாளர் (இ. 1955)

1880 – ஜோசேபே முஸ்காதி, இத்தாலிய மருத்துவர் (இ. 1927)

1887 – குமாரதுங்க முனிதாச, சிங்கள எழுத்தாளர், கவிஞர் (இ. 1944)

1894 – காவ்ரீலோ பிரின்சிப், பொசுனிய-செர்பிய புரட்சியாளர் (இ. 1918)

1908 – செம்மங்குடி சீனிவாச ஐயர், தமிழக கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)

1915 – சோ. உ. எதிர்மன்னசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1920 – சு. ஜெயலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2007)

1920 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர், வேதியியலாளர் (இ. 1958)

1920 – சுசிரோ அயாசி, சப்பானிய வானியற்பியலாளர் (இ. 2010)

1929 – சோம்நாத் சட்டர்ஜி, இந்தியாவின் 14வது மக்களவைத் தலைவர்

1931 – பீட்டர் அம்புருசிடர், செருமானிய இயற்பியலாளர்

1938 – சுதிர் காகர், இந்திய உளவியல் பகுப்பாய்வாளர், எழுத்தாளர்

1939 – ச. இராமதாசு, தமிழக அரசியல்வாதி

1939 – மகேந்திரன், தமிழகத் திரைப்பட இயக்குநர்

1946 – பொன். செல்வராசா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1956 – பிரான்செசு ஆர்னோல்டு, அமெரிக்க அறிவியலாளர், பொறியியலாளர்

1964 – ஆனே ஆப்பில்பாம், அமெரிக்க ஊடகவியலாளர்

1973 – கூ யா, சீன செயற்பாட்டாளர்

இறப்புகள்தொகு

1834 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேய மெய்யியலாளர், கவிஞர் (பி. 1772)

1843 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1766)

1980 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், கித்தார் கலைஞர், நடிகர் (பி. 1938)

1983 – குட்டிமணி, தமிழீழப் போராட்டத் தலைவர்

1996 – எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர், தமிழக அரசியல்வாதி (பி. 1896)

2001 – பூலான் தேவி, இந்திய கொள்ளைக்காரி, அரசியல்வாதி (பி. 1963)

2008 – ராண்டி பௌஷ், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1960)

2011 – ரவிச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர்

2013 – அருண் நேரு, இந்திய அரசியல்வாதி (பி. 1944)

2015 – சீலன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி (பி. 1934)

2021 – இரா. இளங்குமரனார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1930)

இன்றைய சிறப்பு நாள்


குடியரசு நாள் (துனீசியா) - يوم الجمهورية تتمنى تونس