🌐 1996ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அட்லாண்டாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமானது.
🚉 1900ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பாரிசில் முதலாவது சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது.
🏀 1980ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் ஆரம்பமானது.
பிறந்த நாள் :-
மங்கள் பாண்டே
🏁 இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.
🏁 1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.
🏁 இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.
🏁 பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
🏁 மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. Raising என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
ஜெயந்த் நர்லிகர்
★ இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் 1938ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார்.
★ நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில்-நர்லிகர் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 41கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Stratosphere) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார்.
★ மேலும் இவரின் பங்களிப்பிற்காக பத்ம பூஷண் விருது (1965), இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இந்திரா காந்தி விருது (1990), பத்ம விபூஷண் விருது (2004), மகாராஷ்டிர பூஷண் விருது (2010), சாகித்ய அகாடமி விருது (2014) உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
★ தனது ஆராய்ச்சிகள் மூலம் பல சாதனைகளை வானியல் துறையில் செய்த இவர் தனது 79வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இன்றைய நிகழ்வுகள்
64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.[1]
484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.
998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது.
1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.
1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.
1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.
1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.
1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று அரச கடற்படையின் தாக்குதலில் மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: உரோமை நகர் மீது கூட்டுப் படைகள் பெரும் வான் தாக்குதலை நடத்தின. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1952 – பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார்.
1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.[2]
1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 – மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.
1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.
1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.
இன்றைய பிறப்புகள்
810 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870)
1827 – மங்கள் பாண்டே, இந்திய சிப்பாய் (இ. 1857)
1846 – எட்வார்டு சார்லசு பிக்கரிங், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1919)
1893 – விளாடிமிர் மயாகோவ்ஸ்கி, உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. 1930)
1894 – கவாஜா நசிமுத்தீன், பாக்கித்தானின் 2வது பிரதமர் (இ. 1965)
1898 – எர்பர்ட் மார்குசே, செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1979)
1909 – பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (இ. 2004)
1921 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2011)
1938 – ஜயந்த் நாரளீக்கர், இந்திய வானியலாளர், வானியற்பியலாளர்
1948 – ஓக்ரம் இபோபி சிங், மணிப்பூர் அரசியல்வாதி
1948 – அல்தமஸ் கபீர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
1949 – கலேமா மொட்லாந்தே, தென்னாப்பிரிக்காவின் 3வது அரசுத்தலைவர்
1955 – ரோஜர் பின்னி, இந்தியத் துடுப்பாளர்
1961 – காம்ப்பெல் ஸ்காட், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1973 – ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
1976 – பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஆங்கிலேய நடிகர்
1979 – மாளவிகா, இந்தியத் திரைப்பட நடிகை
1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாளர்
இன்றைய இறப்புகள்
1814 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய மாலுமி (பி. 1774)
1947 – ஆங் சான், பர்மிய அரசியல்வாதி (பி. 1915)
1947 – சுவாமி விபுலாநந்தர், ஈழத்து தமிழிசை ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், துறவி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1892)
1987 – ஆதவன், தமிழக எழுத்தாளர் (பி. 1942)
2010 – டேவிட் வாரன், ஆஸ்திரேலிய அறிவியலாளர் (பி. 1925)
2012 – உமாயூன் அகமது, வங்காளதேச இயக்குநர் (பி. 1948)
2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)
இன்றைய சிறப்பு நாள்
மாவீரர் நாள் (மியான்மர்)
விடுதலை நாள் (நிக்கராகுவா)